×

27ம்தேதி தேரோட்டம் சாமிதோப்பு ரதவீதி சீரமைப்பு

தென்தாமரைகுளம், ஜன.21:  சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி, தை ஆகிய 3 மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு தை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. தேரோட்டம் வரும் 27ம் தேதி நடக்கிறது. தேரோடும் ரதவீதி குண்டும், குழியுமாக உள்ளதால் தேரோட்டம் நடக்கும் நேரங்களில் தேரை வடம் பிடித்து இழுக்கும் பக்தர்கள் சிரமமடைந்தனர். எனவே நான்கு ரதவீதியையும் மணல் நிரப்பி சீரமைக்க அய்யா அறநெறி பரிபாலன அறக்கட்டளை முடிவு செய்தது.

இதனையடுத்து தற்போது நான்கு ரதவீதிகளில் காணப்படும் மணல் மற்றும் கற்களை ஆழமாக தோண்டி எடுத்து விட்டு பின்னர் மணல் மூலம் சீரமைக்கும் பணி தொடங்கியது. பணிகளை அய்யா அறநெறி பரிபாலன அறக்கட்டளை நிறுவனர் பால.ஜனாதிபதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Floor Thermotype ,
× RELATED மழைநீர் வடிகாலில் கழிவை விட்ட...