×

எஸ்ஐ எழுத்துத்தேர்வில் 810 பேர் பங்கேற்பு

விழுப்புரம்,  ஜன. 14: தமிழக காவல்துறையில் 969 எஸ்ஐ பணியிடத்திற்கு விழுப்புரத்தில் காவல்துறையினர்  ஒதுக்கீட்டு பிரிவில் 810 பேர் கலந்துகொண்டு  எழுத்துத் தேர்வினை எழுதினார்கள். தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக்குழுமத்தால்  காவல்துறையில் காலியாக உள்ள சட்டம்ஒழுங்கு, ஆயுதபடை, பட்டாலியன்  ஆகியபிரிவில் 969 எஸ்ஐக்கள் பணியிடம் அறிவிக்கப்பட்டது. விண்ணப்பித்த  பொதுப்பிரிவினருக்கான எழுத்துத்தேர்வு நேற்று முன்தினம்  தமிழகம்முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் நடந்தது. விழுப்புரம் மாவட்டத்தில்  1,168 பெண்கள் உள்ளிட்ட 7,081 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர்.  இதில் 5,514 பேர் மட்டுமே தேர்வு எழுதினார்கள்.

இதனைத்தொடர்ந்து  நேற்று காவல்துறை ஒதுக்கீட்டினருக்கான எழுத்துத்தேர்வு நடந்தது.  விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 857 பேர் விண்ணப்பித்திருந்தார்கள்.  இவர்களுக்கான எழுத்துத்தேர்வு தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் நடந்தது.  தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 810 பேர் மட்டும் கலந்து கொண்டு  எழுதினார்கள். 47 பேர் தேர்வில் கலந்துகொள்ளவில்லை. தேர்வு மையத்தை  தமிழக காவல்துறை ஐஜி(பொது) கணேசமூர்த்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  தேர்வாளர்களின் ஹால்டிக்கெட்டுகளை வாங்கி சரி பார்த்து ஆய்வுசெய்தார். எஸ்பி  ஜெயக்குமார், கூடுதல் எஸ்பி சரவணக்குமார் உள்ளிட்டவர்கள் பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டனர்.

Tags : participants ,SI ,
× RELATED நெட் தேர்வு ஒத்தி வைப்பு