×

குரங்கணி வனப்பகுதியில் கள்ளத்துப்பாக்கிகள் மூலம் வனவிலங்குகள் வேட்டை

தேனி, ஜன. 10: தேனி மாவட்டம், குரங்கணி வனப்பகுதி மிகவும் அடர்ந்து வளர்ந்துள்ள செழிப்பான வனப்பகுதி ஆகும். இங்கு சிறுத்தை, மிளா, கேழையாடு, சருகுமான், செந்நாய், காட்டுமாடுகள் அதிகம். இங்குள்ள சிலர் கள்ளத்துப்பாக்கிகளை வைத்துள்ளனர். இந்த பகுதியில் இதுவரை 16க்கும் மேற்பட்ட கள்ளத்துப்பாக்கிகள் இருக்கலாம் என போலீசாரே கருதுகின்றனர். இந்த துப்பாக்கிகள் மூலம் வனவிலங்குகள் வேட்டையாடப்படுகிறது. 100 கிலோவிற்கு குறைந்த எடை கொண்ட சருகுமான், மிளா, கேழையாடு, காட்டுமாடுகள் தான் வேட்டைக்காரர்களின் இலக்காக உள்ளது. இப்படிப்பட்ட விலங்குகளை வேட்டையாடினால், அடித்து மாமிசத்தை கொண்டு வருவதும், பகிர்வதும் எளிது. சில நேரங்களில் வேட்டைக்காரர்களுடன் முக்கிய பொறுப்பு வகிக்கும் சில சீருடை கீழ்நிலை பணியாளர்களும் பங்கு வாங்கி மது அருந்தி விட்டு, இந்த இறைச்சியை சாப்பிடுவது வழக்கமாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் புகார் எழுப்பி உள்ளனர்.

இதுதவிர குரங்கணி வனப்பகுதியில் பட்டா காடுகளும், வனக்காடுகளும் அடுத்தடுத்து, இருப்பதால் உள்ளே ஆட்கள் சென்று வருவதை தடுக்க வழியில்லை. இதுவே வேட்டைக்காரர்களுக்கு வசதியாக போய் விடுகிறது. இங்குள்ள சிசிடிவி கேமராவில் யார், யார் சென்று வருகிறார்கள் என்ற விபரம் மட்டுமே பதிவாகும். வேட்டை வனத்திற்குள் நடப்பதால், சென்றவர்களில் யார் வேட்டையாடுகின்றனர் என்பது தெரியவில்லை. இதுவும் வேட்டைக்காரர்களுக்கு சாதகமாக போய் விடுகிறது.இந்த வேட்டையால் ஏராளமான விலங்குகள் அழிக்கப்பட்டு விட்டன. மீதம் உயிர்தப்பிய விலங்குகள் பேரீச்சம், கொடைக்கானல் வனப்பகுதிக்கு தப்பி சென்ற விட்டன. இதனால் குரங்கணி பகுதியில் உயிரின சமநிலை சூழல் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகிறது என வனஆர்வலர்கள் புகார் எழுப்பி உள்ளனர்.

Tags : monkey forest ,
× RELATED குரங்கணி வனப்பகுதியில் தடையை மீறி...