×

பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க காலையிலேயே குவிந்த மக்கள் கூட்டம்

திருப்பூர், ஜன.10:தமிழக அரசு, 1000 ரூபாய் ரொக்க பரிசுடன், பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க உத்தரவிட்டுள்ளது. பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், இரண்டு அடி துண்டு கரும்பு ஆகியவற்றுடன், ரொக்கமாக, 1000 ரூபாயும் வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டம் முழுவதும், 7.21 லட்சம் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தலா 1,000 ரூபாய் ரொக்க பரிசை, ஐநூறு ரூபாய் நோட்டுகளாக வழங்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு ரேஷன் கார்டுதாரருக்கு, 1,000 ரூபாய் ரொக்க பரிசு, 126.50 ரூபாய் மதிப்புள்ள, பொங்கல் பரிசு தொகுப்பு என 1,126.50 ரூபாய் மதிப்புள்ள பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இதற்காக, மாவட்டத்துக்கு, 81.22 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ரொக்கமாக ரூ.1000 கொடுப்பதால் கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதால் நெரிசலை தவிர்க்க அதிகாரிகள் சிறப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளனர். இன்று முதல் வருகிற 12-ம் தேதி வரை 4 நாட்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. விடுபட்டவர்களுக்கு 13ம் தேதி வழங்கப்படும்.

அனைத்து ரேஷன் கடைகளிலும் தினமும் 200 முதல் 300 ரேஷன் கார்டுகளுக்கு மட்டும் பொங்கல் பரிசு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. எந்தெந்த கார்டுகளுக்கு எந்த நாளில் வழங்கப்படும் என்ற விவரம் ரேஷன் கடைகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு விநியோகம் நேற்று  துவங்கியது. இதனை பெற பொதுமக்கள்  காலை 6 மணி முதலே ரேஷன் கடைகள் முன்பாக கூட்டம் குவிந்தது.
உடுமலை:உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்களில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு நேற்று முதல் விநியோகிக்கப்பட்டது. மூன்று ஒன்றியங்களிலும் மொத்தம் 1 லட்சத்து 37 ஆயிரத்து 617 கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. கார்டு எண்கள் வாரியாக நான்கு நாட்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விடுபட்டவர்களுக்கு வேறொருநாள் வழங்கப்படும். இதனால் நெரிசலின்றி, பொதுமக்கள் பொங்கல் பரிசை வாங்கி சென்றனர்.
தாராபுரத்தில்


Tags : morning crowds ,
× RELATED அமராவதி பூங்காவில் தென்னை மரங்கள், சிற்றுண்டிச்சாலை பொது ஏலம்