×

வேலை நிறுத்த போராட்டத்தால் வங்கிகளில் ₹500 கோடி பரிவர்த்தனை முடக்கம்

தர்மபுரி, ஜன.9: தர்மபுரி மாவட்டத்தில், மத்திய அரசை கண்டித்து வேலைநிறுத்த போராட்டத்தால், வங்கிகளில் நேற்று ஒருநாள் மட்டும் ₹500 கோடி பரிவர்த்தனை முடக்கம் ஏற்பட்டுள்ளது என வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் கலீயுல்லா தெரிவித்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தையொட்டி, மத்திய அரசை கண்டித்து அரசு மற்றும் அரசு வங்கி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பின்னர், தர்மபுரி இந்தியன் வங்கி முன்பும், பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் கலீயுல்லா தலைமை வகித்தார். வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகள் ராமமூர்த்தி, பழனிவேலு, சரவணன், செந்தில்வேலன், சந்துரு, செழியன், சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் கலீயுல்லா கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், கிராம வங்கிகள் என 147 வங்கி கிளைகள் உள்ளன. இந்த வங்கிகளில் 420க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். வங்கியில் தினசரி சுமார் ₹500 கோடி மதிப்பில், வங்கி பரிவர்த்தனை நடக்கும். நேற்று வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், வங்கிகளில் பணம் மற்றும் காசோலை, ஆன்லைன் வழியான பரிவர்த்தனை முடங்கியது. இதனால் நேற்று மட்டும் ₹500 கோடி வங்கி பரிவர்த்தனை முடங்கியது,’ என்றார்.

Tags : banks ,strike strikes ,
× RELATED வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல்