×

நிலப்பிரச்னையில் இருதரப்பினர் மோதல்

பாப்பிரெட்டிப்பட்டி, மார்ச் 28: பாப்பிரெட்டிப்பட்டி அருகே, நிலப்பிரச்னையில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில், பெண் உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த அலமேலுபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன்(55). இவரது தம்பி ரங்கநாதன்(45). இருவருக்கும் நிலம் தொடர்பாக நீண்ட காலமாக முன்விரோதம் இருந்தது வந்தது. தற்போது ரங்கநாதன் பிரச்னைக்குரிய இடத்தில் வீடு கட்டும் வேலையை செய்து வந்தார். நேற்று அங்கு வந்த கோவிந்தன், அவரது உறவினர்கள் செந்தில்குமார்(33), ஏழுமலை (32) ஆகியோர், ஏதற்காக இந்த இடத்தில் வீடு கட்டுகிறாய் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது ரங்கநாதன், அவரது மனைவி கவிதா ஆகிய இருவரும் சேர்ந்து  கல்லால் அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். பதிலுக்கு அவர்களும் ரங்கநாதன், கவிதாவை தாக்கி உள்ளனர். இதில் செந்தில்குமார், ஏழுமலை, கோவிந்தன் மற்றும் எதிர் தரப்பை சேர்ந்த ரங்கநாதன், கவிதா ஆகியோருக்கு காயமடைந்து பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சை பெற்று வருகின்றனர். இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில், பாப்பிரெட்டிப்பட்டி போலீசார், இருதரப்பை சேர்ந்த 5பேர் மீது வழக்குபதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா