×

கலெக்டர் உத்தரவு அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் திருத்தம் வயது வரம்பு 45 வரை உயர்த்தப்பட்டது

நாகர்கோவில், ஜன.9: குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின் கீழ் குமரி மாவட்டத்தில் ஊரகம் மற்றும் நகர்புற பகுதிகளில் வாழும் மகளிர் பணியிடங்கள் மற்றும் பிற இடங்களுக்கு எளிதில் செல்ல இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்க உள்ளாட்சி அமைப்பு வாரியாக கடந்த 20.09.2019 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டுநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது பயனாளிகளின் வசதிக்காக இத்திட்டத்தின்கீழ் இதுவரையில் 18 வயது முதல் 40 வயது வரை என்றிருந்த வயது வரம்பினை 18 முதல் 45 வயது வரை என உயர்த்தி அதிக அளவில் மகளிர் பயன் பெறும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் மகளிரின் வருட வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மிகாத அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், உதவியாளர்கள் சமையலர்கள், கூட்டுறவு சங்கத்தில் மற்றும் கடைகளில் பணிபுரியும் மகளிர் மற்றும் பல்வேறு அரசு துறைகளில் பணிபுரிவோர் நகர்புற உள்ளாட்சி அமைப்புகள், ஊரக உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் பணிபுரியும் மகளிர் ஆகியோரும் இத்திட்டத்தின் கீழ் பயனடைய தகுதியுடையவர் என விரிவுபடுத்தி திருந்திய உத்தரவு பெறப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் தகுதிகளுடைய மகளிர் ஏற்கனவே தெரிவித்தவாறு சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அந்தந்த அலுவலகங்களில் வேலைநாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சமர்ப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...