×

மார்கழி மாதத்தையொட்டி நவகைலாயத்திற்கு சிறப்பு அரசு பஸ்கள் இயக்கம்

நெல்லை, ஜன.8: நெல்லை அரசு போக்குவரத்து கழகம் மார்கழி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் நவகைலாய கோயில்களான பாபநாசம், சேரன்மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, வைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்தபூமங்கலம் (புன்னகாயல்) உள்ள சிவன் கோயில்களுக்கு சென்று பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு பஸ்கள் டிச.22, 29, ஜன.5, ஜன.12ம்தேதி ஆகிய நான்கு நாட்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதைதொடர்ந்து டிச.22, 29ம்தேதிகளில் நவகைலாய கோயில்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையொட்டி அதிகளவு பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தனர். இதையடுத்து நவகைலாய கோயில்களுக்கு மூன்று பஸ்களில் 150 பயணிகள் சென்றனர். அவர்களுக்கு  குடிநீர், பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன. 4வது ஞாயிற்றுக்கிழமையான ஜன.12ம் தேதியும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக கூடுதல் சிறப்பு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நவகைலாயம் செல்ல பக்தர்கள் புதிய பஸ் நிலையத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ரூ.500 கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Tags :
× RELATED டிராக்டர் கலப்பையை திருடிய வாலிபர் கைது