×

கரூர் குளத்துப்பாளையம் பகுதியில் குளம்போல் கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேடு

கரூர், ஜன. 8: கரூர் குளத்துப்பாளையம் பகுதியில் சாக்கடை வடிகால் சரியாக அமைக்காத காரணத்தினால் கழிவு நீர் குளம் போல தேங்கி கடும் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட திட்டச்சாலை செல்லும் சாலையில் குளத்துப்பாளையம் பகுதியை ஒட்டி தனியார் நிலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் கழிவுகள் அனைத்தும் குளம் போல தேங்கியுள்ளது. அந்த கழிவுகள் சீராக செல்ல முடியாத அளவுக்கு வடிகால் வசதி சரிவர அமைக்காத காரணத்தினால் சாக்கடை கழிவுகள் தேங்கி நின்று பகுதி முழுவதும் கடும் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. கழிவு நீர் தேக்கம் காரணமாக, கொசுக்கள் உற்பத்தி, பல்வேறு பகுதிகளில் இருந்து குப்பைகள் இந்த பகுதியில் கொட்டப்படுவதால் ஏற்படும் துர்நாற்றம், குப்பைகளை தேடி வரும் பன்றிகளால் சுகாதார சீர்கேடு போன்ற பல்வேறு தொந்தரவுகளால் பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இது குறித்து நகராட்சியினர்களும் நேரில் வந்து பார்வையிட்டும், இதனை முற்றிலும் சரி செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. சுகாதாரத்துக்கு கடும் அச்சுறுத்தலாக இருந்து வரும் இந்த பிரச்னைக்கு தேவையான நிரந்தர தீர்வு காணப்படும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேவையான சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு தேவையான சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Chronic Wasting Water Conservation ,Karur Kulathupalayam Area ,
× RELATED செவ்வாய்தோறும் மாநகராட்சி பகுதிகளில் முட்செடிகளை அகற்ற வேண்டும்