×

வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மின்விளக்கு வசதியில்லாமல் இருட்டு குகையாக மாறிய நவீன கழிவறை தட்டுத்தடுமாறி சென்ற மக்கள்

வேலூர், ஜன.7: வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மின்விளக்கு வசதியில்லாமல் இருட்டு குகையாக மாறிய நவீன கழிவறையை பயன்படுத்த முடியாமல் மனு கொடுக்க வரும் பொதுமக்கள் தட்டுத் தடுமாறி செல்லும் அவலநிலை உள்ளது. வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடக்கிறது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து, நிலம், பணம் மோசடி, உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களுடன் பொதுமக்கள் வந்து கலெக்டரிடம் நேரடியாக புகார் அளிக்கின்றனர்.

இதனால் திங்கள் கிழமைகள் தோறும், மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறும் அரங்கத்திற்கு அருகே உள்ள கழிவறை திறந்து வைக்கப்படும். அங்கு ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த கழிவறைக்கு மின்விளக்கு வசதியில்லாமல் இருட்டு குகையாக காட்சியளிக்கிறது. இதனால் குறைதீர்வு கூட்டத்திற்கு வரும் மக்கள் கழிவறைக்குள் செல்லும் போது தட்டு தடுமாறி கீழே விழுந்து செல்லும் நிலையாக உள்ளது. ஆண்கள் கழிவறை என்பதால் மெயின் கதவு திறந்து வைப்பதால், லேசான சூரிய வெளிச்சம் உள்ளது. ஆனால் பெண்களின் நிலையோ படுமோசம், எனவே கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நவீன கழிவறைக்கு மின்விளக்கு வசதி ஏற்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Vellore Collector's Complex ,cave ,
× RELATED கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளுக்கு நேர அவகாசம்