×

மூணாறில் காலையில் நடக்கும் தார்ச்சாலை பணிகளால் போக்குவரத்து நெருக்கடி சுற்றுலா பயணிகள் கடும் அவதி

மூணாறு, டிச.31: மூணாறில் கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் தார்ச்சாலை அமைக்கும் பணி காலை நேரத்தில் நடைபெற்று வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். நீண்ட நேரம் நெரிசலில் சிக்கி தவிப்பதால் மூணாறை பார்வையிட முடியாமல் அவர்கள் திரும்பி செல்லும் நிலை உருவாகியுள்ளது. மூணாறில் கனமழைக்கு பின் தற்போது சாலைகள் சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகளை ஓட்டி நடைபெறும்  தார்ச்சாலை அமைக்கும் பணிகள் மூலம் வாகன ஓட்டுனர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிவாசல் முதல் மூணாறு வரை சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் தற்போது சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையும் மூணாறில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தார்ச்சாலை அமைக்கும் பணி பகல் நேரத்தில் நடைபெற்று வருவதால் பள்ளிவாசல் முதல் மூணாறு வரை போக்குவரத்து நெரிசலில்  சுற்றுலா பயணிகள் வாகனங்கள் சிக்கி தவிக்கின்றன. 4 கி.மீ தூரம் உள்ள மூணாறு பகுதிக்கு வந்தடைய 2 மணிநேரமாவதாக சுற்றுலா பயணிகள் கவலை தெரிவித்தர். இரவு நேரங்களில் தார்ச்சாலை பணிகளைச் செய்யாமல் பகல் நேரங்களில்  பணிகள் நடைபெறுவதன் மூலம் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக மூணாறில்  முக்கிய சுற்றுலா தலங்களை பார்வையிடமுடியாமல் பயணிகள் திருப்பி செல்லும் நிலை உருவாகியுள்ளது. எனவே, இரவு நேரங்களில் பணிகளை செய்ய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


சுற்றுலா வாகன ஓட்டுநர் பாப்பான் கூறுகையில், ``தார்ச்சாலை அமைக்கும் பணிகள் காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து  நெரிசல் ஏற்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மூணாறை பார்வையிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அதிக பணம் செலவு செய்து மூணாறு வரும் பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் கொச்சி  விமான நிலையம், ரயில் நிலையங்களில் சென்று பெறமுடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே, அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறினார்.

Tags : Munnar ,
× RELATED மூணாறு அருகே கள்ளச்சாராய ஊறல் அழிப்பு