×

கோவை குற்றாலத்துக்கு போதையில் வந்தால் அனுமதி இல்லை

கோவை, டிச.31: கோவை குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் குடிபோதையில் இருந்தால் உள்ளே செல்ல அனுமதியில்லை என மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார். கோவை சாடிவயல் பகுதியில் கோவை குற்றாலம் அமைந்துள்ளது. இங்குள்ள நீர்வீழ்ச்சியில் வருடம் முழுவதும் தண்ணீர் வரும். இதனால், கோவை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். சாடிவயல் செக் போஸ்டில் இருந்து அடர் வனப்பகுதி வழியாக நீர்வீழ்ச்சிலாரல் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா கோவை, டிச. 31: கோவை கவுண்டம்பாளையம் டி.வி.எஸ். நகர் ரோட்டில் உள்ள லாரல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 25வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. பிராத்தனை பாடலுடன் விழா துவங்கியது. பள்ளியின் தாளாளர் பிராங் டேவிட் தலைமை வகித்தார். பள்ளியின் முதல்வர் மார்கரெட் தேவ கிருபை முன்னிலை வகித்து பள்ளியின் வளர்ச்சி குறித்து பேசினார்.

இதில், சிறப்பு விருந்தினராக ஐஎன்எஸ் அக்ரானி அதிகாரி கமாண்டர் அசோக் ராய் பங்கேற்று பேசுகையில், “மாணவர்கள் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். பெரியவர்களை மதிக்க வேண்டும். ஆளுமை திறனை வளர்த்து கொள்ள வேண்டும். சிறந்த உத்திகளையும், விளையாட்டு திறன்களையும் வளர்த்து கொள்ள வேண்டும்” என்றார். இதில், பள்ளியின் நிர்வாக இயக்குனர் அபிஷேக் பால் ஜாக்சன் நன்றி கூறினார்.  இதனைத்தொடர்ந்து முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆகியோரை கவுரவிக்கும் வகையில் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில், பள்ளியின் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவ, மாணவிகள் என பலர் கலந்துகொண்டனர்.

Tags : Goa Courtallam ,
× RELATED கோவை குற்றாலத்துக்கு போதையில் வந்தால் அனுமதி இல்லை