×

டிஆர்இயூ தொழிற்சங்கம் எதிர்ப்பு செந்துறை வட்டார பகுதியில் நிலக்கடலை பயிரில் களையெடுப்பு தீவிரம்

அரியலூர்,டிச.30: அரியலூர் மாவட்டம் செந்துறை சுற்று வட்டார பகுதிகளில் மானாவாரி, நிலத்தடிநீர் பாசனத்தின் மூலம் நிலக்கடலை சாகுபடி செய்து வருகின்றனர். இதில் செந்துறை, நிண்ணியூர், இலைக்கடம்பூர், உடையான்குடிக்காடு பகுதிகளில் மானாவாரியாக நிலைக்கடலை சாகுபடி செய்து தற்பொழுது பூக்கும் தருணத்தில் உள்ளது. இதனால் விவசாயிகள் களையெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நிலத்தில் கடலை செடியிலிருந்து கோம்புகள் எளிதில் உள்ளே சென்று அதிக மகசூல் கிடைக்கும்.

மேலும் ஜிப்சம் இடுவதாலும் மண் கடினமாக இல்லாமல் இலகுவாக இருக்கும் என தெரிவிக்கின்றனர். மேலும் தற்போது மழை முடிந்து குளிர் காலம் துவங்கியதால் நிலத்தடிநீரை பயன்படுத்தி உஞ்சினி, இரும்புலிகுறிச்சி, சிறுகடம்பூர், ஆர்எஸ் மாத்தூர், மணக்குடையான் பகுதிகளில் நிலக்கடலை பயிர் செய்வதற்காக நிலத்தை உழுவது, பாத்தி அமைப்பது, கடலை போடுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்போது பயிரிடப்படும் நிலக்கடலை மார்ச் மாத இறுதியில் அறுவடை செய்யப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags : area ,TREU Union Anti-Center ,
× RELATED குஜராத் ராஜ்கோட் பகுதியில் வணிக வளாக...