×

பார்வையற்றோருக்கு மாதம் q 3 ஆயிரம் உதவித்தொகை முப்பெரும் விழாவில் வலியுறுத்தல்

நாகர்கோவில், டிச.30: பார்வையற்றோருக்கு மாதம் தோறும் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று ஆசாரிபள்ளத்தில் நடந்த முப்பெரும் விழாவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு பார்வையற்றோர் இயலாதோர் நல அறக்கட்டளையின் முப்பெரும் விழா ஆசாரிபள்ளத்தில் நடந்தது. அறக்கட்டளை இயக்குனர் அருள்செல்வம் தலைமை வகித்தார். கவுரவ தலைவர் ஜெரோமியாஸ் அடிகள் முன்னிலை வகித்தார். ஐசக் சுந்தர்சிங் இறைவேண்டல் செய்தார். லைசால் எட்வர்ட், தனிஸ்லாஸ், செல்வராஜ், மரியவில்லியம், பிரான்சிஸ் சேவியர், ஜெயசீலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினர். இதில் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், ஜெரால்டு, இஸ்மாயில், இசக்கிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு பார்வையற்ற மாற்றுத்திறளாளிகளுக்கு மாதாந்திர உதவி தொகையை q3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். பார்வையற்றோருக்கு தகுதி அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். 50 சதவீத மானியத்துடன் நிபந்தனையின்றி பொதுத்துறை வங்கிகள் கடன் வழங்க வேண்டும். பார்வையற்ற மாற்றுத்திறன் படைத்தவர்களுக்கு சமத்துவபுரம் போன்ற இடங்களில வீடுகள் ஒதுக்கி தர வேண்டும், சமையல் எரிவாயு கட்டணத்தை குறைத்து வழங்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags :
× RELATED பாலவிளையில் புதிய அங்கன்வாடி மையம்