×

மகுடஞ்சாவடியில் அதிகபட்சமாக 87.30 சதவீத வாக்குகள் பதிவு

சேலம், டிச.29: சேலம் மாவட்டத்தில் 12 ஒன்றியங்களில் நேற்று முன்தினம் முதல் கட்ட தேர்தல் நடந்தது. ஒட்டுமொத்தமாக 4,84,634 ஆண் வாக்காளர்களும், 4,57,451 பெண் வாக்காளர்களும், 35 திருநங்கை வாக்காளர்களும் என 9,42,120 பேர் வாக்களிக்க வசதியாக 1,568 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இதில், 3,96,445 ஆண் வாக்காளர்களும், 3,73,032 பெண் வாக்காளர்களும், 13 திருநங்கை வாக்காளர்களும் என 7,69,490 பேர் வாக்களித்தனர். இது 81.68 சதவீதமாகும். ஒன்றிய வாரியாக பார்க்கும்போது, இடைப்பாடி 83.06, காடையாம்பட்டி 78.38, கொளத்தூர் 73.06, கொங்கணாபுரம் 85.05, மகுடஞ்சாவடி 87.30, மேச்சேரி 79.56, நங்கவள்ளி 82.51, ஓமலூர் 82.06, சங்ககிரி 78.70, தாரமங்கலம் 85.64, வீரபாண்டி 84.22, ஏற்காடு 81.01 சதவீதம் பதிவாகியுள்ளது.

மிக அதிகபட்சமாக மகுடஞ்சாவடி ஒன்றியத்தில் 87.30 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக கொளத்தூர் ஒன்றியத்தில் 73.06 சதவீதமும் பதிவாகியுள்ளது. ஏற்காடு ஒன்றியத்தில் மட்டும் ஆண் வாக்காளர்களை விட அதிகமாக பெண் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். அங்கு, 12,049 ஆண் வாக்காளர்களும், 12,278 பெண் வாக்காளர்களும் வாக்களித்துள்ளனர். மற்ற ஒன்றியங்களில் ஆண் வாக்காளர்களே அதிகம் வாக்களித்தனர்.

Tags :
× RELATED பைக் மீது கார் மோதி மெக்கானிக் பலி