×

கரவிளாகம் கிருஷ்ணசாமி கோயிலில் பஜனை பட்டாபிஷேக விழா கருட வாகனத்தில் சுவாமி பவனி இன்று நடக்கிறது

நாகர்கோவில், டிச. 27: மார்த்தாண்டம் அருகே உள்ள நல்லூர் கரவிளாகம் கிருஷ்ணசாமி ேகாயில் 46வது பஜனை பட்டாபிஷேக திருவிழாவும், இந்து சமய மாநாடும் கடந்த 20ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவையொட்டி தினமும் நடைதிறப்பு, நிர்மால்ய பூஜை, வாகை சார்த்து, கணபதிஹோமம், உஷபூஜை, அன்னதானம், பஜனை, அத்தாழபூஜை ஆகியவை நடக்கிறது. எட்டாம் திருவிழாவான இன்று (27ம்தேதி) காலை 5.30 மணிக்கு அபிஷேகம், 7 மணிக்கு முளபூஜை, 7.15 மணிக்கு பாராயணம், 10 மணிக்கு கலச பூஜையும், கலச அபிஷேகமும், மதியம் 12 மணிக்கு உச்சபூஜை, 12.15 மணிக்கு அன்னதானம், மாலை 3.15 மணிக்கு  கிருஷ்ணசுவாமி கருட வாகனத்தில் பவனி வருதல், 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு கிருஷ்ண சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளுதல், 9 மணிக்கு அத்தாழ பூஜை, 9.10 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடக்கிறது. 9ம் நாள் திருவிழாவான 28ம் தேதி காலை 5.30 மணிக்கு அபிஷேகம், 6.45 மணிக்கு பாராயணம், 9 மணிக்கு ராகுகால துர்கா பூஜை, 9.30 மணிக்கு சமயவகுப்பு ஆண்டு விழா, 10 மணிக்கு கலச பூஜையும், கலச அபிஷேகமும் நடக்கிறது.  11.30 மணிக்கு சீவேலி, மதியம் 12.30 மணிக்கு அன்னதானம், இரவு 7.10 மணிக்கு சமய வகுப்பு மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், 8.30 மணிக்கு கிருஷ்ண சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளல், 10.30 மணிக்கு பள்ளிவேட்டை ஆகியவை நடக்கிறது. 10ம் திருவிழாவான 29ம் தேதி காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 9 மணிக்கு கீதாபாராயணம், 10 மணிக்கு கலச பூஜையும், கலச அபிஷேகமும், மதியம் 12.30 மணிக்கு அன்னதானம், மாலை 4 மணிக்கு ஆறாட்டு, இரவு 8 மணிக்கு சிறப்பு பூஜை, 8.45 மணிக்கு கொடியிறக்குதல், 9 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆலய டிரஸ்ட் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Tags : Swami Bhavani ,ceremony ,Karavilagam Krishnaswamy Temple ,Bhajan Pattabhisheka ,
× RELATED விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா