×

பிஷப் ஜெரோம்தாஸ்

அகில உலகமே இயேசுவின் பிறப்பு விழாவை மகிழ்வுடன் கொண்டாடுகிறது.  கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல பிற மதத்தவர்களும் இதைகொண்டாடுகின்றனர். காரணம்  கடவுள் நம்மீது கொண்ட அன்பினால் தனது திருமகனை இவ்வுலகிற்கு அனுப்பினார்.  அவரும் தந்தை கடவுளின் அன்பை அனைத்து மக்களோடும் பகிர்ந்துகொண்டார். எனவே,  கிறிஸ்து பிறப்பு விழாஅன்பின் விழா. “என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது  போல நானும் உங்கள் மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள்”  (யோவான் 15:9). நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல நீங்களும் ஒருவர்  மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை (யோவான் 15:12).

எனவே  கிறிஸ்து பிறப்பு விழாவின் மகிழ்ச்சி எதில் அடங்கியிருக்கிறது என்றால்  நாம் ஒருவர் மற்றவரை அன்பு செய்வதில் தான் இருக்கிறது.  நம்மில் இருக்கும்  சுயநலம், பண ஆசை, புகழாசை, பகைமை, வெறுப்பு, பிறரை குறை கூறுவது,  பழிவாங்குவது. இந்த தீமைகளால் நாம் மகிழ்ச்சியை இழந்து விடுகின்றோம். இந்த  தீமைகளைஅகற்றினால் தான் குழந்தை இயேசு நமதுஉள்ளத்தில் பிறப்பார்.நமக்கு மகிழ்வை தருவார். எனவே நம்மில்  புதைந்துகிடக்கும் பயம், பாவம், அச்சங்களை அகற்றுவோம்.அமைதி  ஏற்படுத்துவோர் பேறு பெற்றோர் ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என  அழைக்கப்படுவர் (மத்தேயு 5: 9). இந்திய நாட்டில் வாழும் நாம் இந்திய  மக்களுக்கு இயேசுவின் அமைதியை கொடுக்க வேண்டுமானால் இந்தியாவில் ஜனநாயகத்தை  நிலைநாட்ட வேண்டும். சமயசார்பற்ற தன்மைக்காக உழைக்க வேண்டும்.  உங்கள் அனைவருக்கும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு  விழா வாழ்த்துக்கள்.


Tags : Bishop ,
× RELATED பிஷப்புக்கு கத்தி குத்து: 7 பேர் கைது