×

செய்யாறு, அனக்காவூர், வெம்பாக்கம் ஒன்றியங்களில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் 3685 பேருக்கு 2ம் கட்ட பயிற்சி

செய்யாறு, டிச.24: உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்றும் அலுவலர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி செய்யாறு, அனக்காவூர், வெம்பாக்கம் ஒன்றிய பகுதிகளில் நடந்ததை தேர்தல் பார்வையாளர் சுந்தரவல்லி ஆய்வு செய்தார். செய்யாறு அடுத்த வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் 1548 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி வட்டார வளர்ச்சி அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், வாக்குச்சாவடி தலைமை அலுவலர் உள்ளிட்ட 5 பிரிவுகளாக தேர்தலில் பணியாற்றும் அலுவலர்கள் அவர்களது பணி குறித்தும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்தும் பயிற்சி அளித்தார். அப்போது தேர்தல் பார்வையாளர் சுந்தரவல்லி தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்தும் சட்டத்தின்படி தேர்தலில் என்னென்ன விதிகள் கூறப்பட்டுள்ளதோ அதன்படி அதிகாரிகள் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதேபோல், அனக்காவூர் ஒன்றியத்தில் நடந்த பயிற்சி கூட்டத்தில் 1174 பேர் பங்கேற்றனர். இவர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜவேல், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குப்புசாமி ஆகியோர் வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தார். செய்யாறு ஊராட்சி ஒன்றியத்தில் 963 நபர்களுக்கு உள்ளாட்சி தேர்தல் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமாரி தலைமையில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், பணி மேற்பார்வையாளர் அண்ணாதுரை ஆகியோர் வாக்குச்சாவடி மையத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

வெம்பாக்கம், அனக்காவூர், செய்யாறு ஆகிய ஒன்றியங்களில் காலை, மாலை என 2 கட்டங்களாக நடந்த தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டத்தினை தேர்தல் பார்வையாளர் சுந்தரவல்லி நேரில் பார்வையிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். மேலும், தேர்தல் அமைதியாக நடத்துவதற்கு அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

Tags : persons ,polling stations ,Vembakkam ,Cheyyar ,
× RELATED நீலகிரியில் 176 பதற்றமான...