×

காற்றுமாசை தடுத்து மரக்கன்று நட மாற்றுத்திறன் வாலிபர் ஒற்றைக்காலில் சைக்கிள் பயணம்

சேலம், டிச.24: காற்றுமாசை தடுத்து மரக்கன்று நட வலியுறுத்தி, ஒற்ைறக்காலில் மாற்றுத்திறன் வாலிபர் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(36). எம்.காம் பட்டதாரியான இவர், சிறுவயதில் விளையாடும்போது ஏற்பட்ட விபத்தால், அவரது இடதுகாலை இழந்தார். ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் மகனான மணிகண்டன், சமூக செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டார். இதன் காரணமாக, காற்று மாசு ஏற்படுவதை தடுத்திடவும், மரக்கன்றுகளை நட வலியுறுத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தார். இதனை பொதுமக்களிடம் தெரிவிக்கும் விதமாக, கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை ஒற்றைக்காலில் சைக்கிளை இயக்கி செல்லும் பயணத்தை, கடந்த 13ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். தூத்துக்குடி, நெல்லை, மதுரை வழியாக ேநற்று சேலத்தை வந்தடைந்தார்.

கலெக்டர் அலுவலகம் வந்த அவர், பொதுமக்களிடம் துண்டுபிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதுகுறித்து மணிகண்டன் கூறுகையில், ‘‘பிளாஸ்டிக் ஒழிப்பு, காற்று மாசு அகற்றம், மரக்கன்றுகள் நடுவது போன்றவை குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஒற்ைற காலில் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளேன். தினமும் 60 கிலோ மீட்டர் பயணம் செய்து, வழிநெடுகிலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு நோட்டீஸை வழங்கி வருகிறேன். வரும் ஜனவரி 1ம் தேதி, சென்னையில் எனது பயணத்தை முடிக்க உள்ளேன்,’’ என்றார்.

Tags : Bicycle riding ,
× RELATED உடலுறுப்பு தானத்தை வலியுறுத்தி...