×

எஸ்கேவி வித்யாஷ்ரம் பள்ளியில் கணித கண்காட்சி

திருச்செங்கோடு, டிச.24: திருச்செங்கோடு அருகேயுள்ள கந்தம்பாளையம் எஸ்.கே.வி வித்யாஷ்ரம் மேல்நிலைப்பள்ளியில், தேசிய கணித தினம் அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு கணித கண்காட்சி  நடந்தது.  பள்ளியின் தலைவர் கோல்டன் ஹார்ஸ் ரவி, கணித கண்காட்சியை துவக்கி வைத்தார். பொருளாளர் டாக்டர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார். இந்த கண்காட்சியில்,  எளிய முறையில் கணிதத்தை கையாளும் விதம், கணித முறைகள், வரையறைகள், வாய்ப்பாடு, கணித புதிர்கள், தேற்றங்கள், சூத்திரங்கள் உள்ளிட்ட பல இடம்பெற்றிருந்தன. நிகழ்ச்சியில், நம் அன்றாட  வாழ்வில் கணிதத்தின் பயன்பாடு குறித்து விளக்கப்பட்டது. இதில் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Tags : Maths Exhibition ,SKV Vidyashram School ,
× RELATED சிறப்பு ஒதுக்கீட்டில் 12 மாணவர் சேர்க்கை