×

₹2.56 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

 

பரமத்திவேலூர், மே 31: பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து அதை உலர்த்தி, வியாழக்கிழமை தோறும் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வருகின்றனர். இங்கு தரத்திற்கு தகுந்தார் போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது.

நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு, ‌3 ஆயிரத்து ‌‌450 கிலோ கொப்பரை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ₹91.60க்கும், குறைந்த பட்சமாக ₹89.01க்கும், சராசரியாக ₹91.21க்கும் ஏலம் போனது. இரண்டாம் தர தேங்காய் பருப்பு அதிக பட்சம் ₹84.99க்கும், குறைந்த பட்சம் ₹77.99க்கும், சராசரியாக ₹80.01க்கும் ஏலம் போனது. மொத்தம் ₹2.56 லட்சத்திற்கு ஏலம் போனது.

The post ₹2.56 லட்சத்திற்கு கொப்பரை ஏலம் appeared first on Dinakaran.

Tags : Paramathivelur ,Paramathi Vellore Electronic National Agriculture Market ,Vengamed ,Kobari ,
× RELATED பெற்றோருக்கு தெரியாமல் இரவில் கார்...