×

அரசு மருத்துவமனைக்கு நவீன படுக்கை வழங்கல்

 

திருச்செங்கோடு, மே 29: நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை ஏற்பாட்டில், பிஆர்டி நிறுவனங்கள் சார்பில், திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு ரத்த தானம் செய்வோருக்காக ₹60 ஆயிரம் மதிப்பிலான நவீன படுக்கை வழங்கப்பட்டது. நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் தலைமை வகித்தார்.

பிஆர்டி நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனரும், நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை தலைவருமான பரந்தாமன், அறக்கட்டளை நிறுவனர் சேன்யோகுமார், செயலாளர் சதீஷ்குமார், துணைத்தலைவர் மகேஷ்குமார், இணை செயலாளர் கலையரசி ஆகியோர் தலைமை மருத்துவர் மோகனபானு, மருத்துவர்கள் செந்தில், தனசேகர் ஆகியோரிடம் வழங்கினர். இந்த நவீன ரத்த கொடையாளர் படுக்கை மூலம் ரத்த தானமளிப்போர் சௌகரியமாக அமர்ந்து உடல் சோர்வின்றி ரத்தம் வழங்க முடியும். நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர் ரமேஷ், வெங்கட், தீபக், இளவரசன், கிஷோர், தர், ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post அரசு மருத்துவமனைக்கு நவீன படுக்கை வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Tiruchengode ,Namma Thiruchengode Foundation ,BRT ,Tiruchengode Government Hospital ,Namakkal West District DMK ,Mathura Senthil ,
× RELATED ₹8.85 லட்சத்திற்கு பருத்தி, எள் ஏலம்