×

சிறப்பு ஒதுக்கீட்டில் 12 மாணவர் சேர்க்கை

 

மோகனூர், மே 31: நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், இளங்கலை பாடப்பிரிவில் தமிழ், இயற்பியல் வேதியல் உட்பட 13 பிரிவுகள் உள்ளன. இதில் 938 மாணவ, மாணவிகள் சேர்க்கை உள்ளது.
இப் பாடப்பிரிவுகளுக்கு தமிழகம் முழுவதும் இருந்தும் ஏராளமான மாணவி, மாணவிகள் 2024ம் கல்வி ஆண்டிற்கு விண்ணப்பித்திருந்தனர். முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள், மாற்றுத்திறனாளர், விளையாட்டு வீரர்கள், என்.சி.சி., மாணவர்கள் உட்பட சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் 45 இடங்களுக்கான இட ஒதுக்கீட்டில் விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும், நேற்று கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்றது.

சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் 12 மாணவ, மாணவிகள் தாங்கள் விரும்பிய பாடங்களை தேர்ந்தெடுத்து கல்லூரியில் சேர்ந்தனர். சிறப்பு சேர்க்கையில் சேர்ந்த மாணவர்கள் கல்லூரி முதல்வர் ராஜா சேர்க்கைக்கான ஆணையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

The post சிறப்பு ஒதுக்கீட்டில் 12 மாணவர் சேர்க்கை appeared first on Dinakaran.

Tags : Mohanur ,Namakkal Arignar Anna Government Arts College ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மோகனூர் அருகே மணல் கடத்தல் வழக்கில் லாரி உரிமையாளர் கைது