×

வெங்கடேஸ்வரா பேக்கரியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கேக் விற்பனை அமோகம்

ஈரோடு, டிச.24: ஈரோடு வெங்கடேஸ்வரா பேக்கரியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கேக் விற்பனை அமோகம் நடந்து வருகிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பிறந்தநாள் கேக்குகள் என்றாலே அது கடந்த 40 ஆண்டுகளாக ஈரோடு காந்திஜி ரோடு மற்றும் பெருந்துறை ரோடு குமலன்குட்டை பஸ் ஸ்டாப்பில் செயல்பட்டு வரும் வெங்கடேஸ்வரா பேக்கரி மற்றும் ஸ்வீட்ஸ்தான். இதுகுறித்து இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் குமாரசாமி, வெங்கடேஸ்வரன் ஆகியோர் கூறியதாவது:
இந்தாண்டு கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி புதிய ரக கேக்குகள் வித்தியாசமான சுவைகளில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. பிளம் கேக் வகைகள், கிரீம் கேக் வகைகள், முந்திரி கேக், மில்க் கேக், ஐஸ்சிங் கேக், வெண்ணிலா கேக், பிளாக்பாரஸ்ட், பிளாக்பெர்ரி கேக், பிறந்தநாள் கேக்குகள், முட்டை சேர்க்கப்படாத கேக் வகைகள், சர்க்கரை நோயாளிகளுக்கான கேக் உட்பட 100க்கும் மேற்பட்ட கேக் வகைகள் மற்றும் இனிப்பு, கார வகைகள், பப்ஸ், சிப்ஸ் வகைகளும் சுகாதாரமான முறையில் சுத்தமானதாக தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து சுப விசேஷங்களுக்கும் ஆர்டரின் பேரில் இனிப்பு மற்றும் கார வகைகளை சப்ளை செய்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Christmas ,Cake Sale ,Venkateswara Bakery ,
× RELATED தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட...