×

வாலிபருக்கு சரமாரி பிளேடு வெட்டு

சென்னை: மது அருந்த பணம் தராததால் அயனாவரம் கே.கே.நகர் 10வது தெருவை சேர்ந்த  ரமேஷ் (56) என்பவரை, பிளேடால் சரமாரியாக கிழித்த அவரது நண்பர் அதே பகுதியை  சேர்ந்த இம்மானுவேல் (27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
* புளியந்தோப்பு பேசன் பாலம் ஆரி தெருவை சேர்ந்த சுரேந்தர் (32), நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு தனது பைக்கை நிறுத்தி இருந்தார். இதை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
* ஓட்டேரி புதிய வாழைமா நகரை சேர்ந்த மோத்திராஜ் (59) என்பவர், மனைவி இறந்த துக்கத்தில் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
* அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் கஞ்சா விற்ற பீகாரை சேர்ந்த சுபேசவுத்ரி (36), திருநெல்வேலியை சேர்ந்த மகேஷ்குமார் (22), சுவர்ண வேலாயுதம் (22) ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 1.3 கிலோ கஞ்சா மற்றும் ₹7ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
*  எர்ணாவூர் சாலையை சேர்ந்த கோவிந்தன் குட்டி மனைவி மைதிலி (65). நேற்று முன்தினம் காலை இவரது வீட்டின் சமையல் அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, மைதிலி படுகாயமடைந்தார். அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
* ஐசிஎப் காந்தி நகர் ஹவுசிங் போர்டு பகுதியில் கஞ்சா விற்ற அம்பத்தூர் அத்திப்பட்டை சேர்ந்த அப்பு தளபதி (28), வில்லிவாக்கத்தை சேர்ந்த பாலாஜி (26), வினோத் (26), சாம்குமார் (18) ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 1.20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
* திருமங்கலம் சாந்தி காலனியில் நேற்று முன்தினம் இரவு மது போதையில் ரகளையில் ஈடுபட்ட அண்ணாநகர் கிழக்கு பி பிளாக் குடியிருப்பை சேர்ந்த கவுதம் (43) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
* ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த அஜய் (19), போரூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிசிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர், திருவேற்காடு காடுவெட்டி அருகே பைக்கில் சென்றபோது, சாலையில் திரிந்த மாடு மீது பைக் மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
* திருவேற்காடு அயனம்பாக்கத்தை சேர்ந்த மதன்ராஜ் (27), நேற்று முன்தினம் இரவு வானகரத்திலிருந்து அம்பத்தூருக்கு பைபாஸ் சாலையில் பைக்கில் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தார்.

Tags : plaintiff ,
× RELATED திருமணமான 4 மாதங்களில் 2வது திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கைது