×

உக்கடத்தில் மின் கம்பங்கள் அகற்றாததால் மேம்பாலம் இணைப்பு பணி பாதிப்பு

கோவை, டிச.16:  கோவை உக்கடத்தில் உயர்ேகாபுர மின் கம்பங்களை அகற்றப்படாததால் மேம்பால இணைப்பு பணி பாதிப்புக்கப்பட்டுள்ளது. உக்கடத்தில் 215 கோடி ரூபாய் செலவில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் 1.9 கி.மீ தூர மேம்பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. இந்த பணிக்காக கோவை சுங்கம் பைபாஸ் ரோடு, செல்வபுரம் பைபாஸ் ரோட்டில் உள்ள உயர் அழுத்த மின் கோபுரங்கள் மற்றும் தாழ்வழுத்த மின் கம்பங்களை அகற்ற கடந்த 2017ம் ஆண்டில் இருந்து டெண்டர் விடப்பட்டு வருகிறது. இதுவரை டெண்டர் இறுதி ெசய்யப்படவில்லை. தற்போது 7வது முறையாக டெண்டர் விடப்பட்டுள்ளது. மின் கம்பங்களை அகற்றினால் மட்டுமே உக்கடம் ரவுண்டானா, சுங்கம், செல்வபுரம் ரோடு சந்திப்பு பகுதியிலும், ராமர் கோயில் வீதி சந்திப்பு பகுதியிலும் மேம்பால தூண்களை இணைக்க முடியும்.

தற்போது 700 மீட்டர் தூரத்திற்கு தூண்கள் அமைக்கப்பட்டு கர்டர்கள் இணைக்கப்பட்டுள்ளது. உக்கடம் லாரி பேட்டை, ரவுண்டானா பகுதியில் மேம்பால கர்டர்கள் இணைக்கப்படவில்லை. இங்கே மின் கம்பங்களின் உயர் அழுத்த கம்பிகளை அகற்றவேண்டியுள்ளது.  ‘‘மின் கோபுர கம்பங்களை அகற்ற, நிலத்தடியில் கேபிள் பதிக்க 8.60 கோடி ரூபாய் ஆன்லைன் டெண்டர் வெளியிடப்பட்டது. ஒப்பந்த நிறுவனத்தினர் 27 சதவீத கூடுதல் தொகை கேட்டனர். 3 முதல் 5 சதவீத தொகை கூடுதலாக வழங்க மட்டுமே நெடுஞ்சாலைத்துறைக்கு அதிகாரம் உள்ளது. 27 சதவீத தொகையை வழங்காததால் ஒப்பந்த நிறுவனத்தினர் பணியை ஏற்க முன் வரவில்லை. ஒவ்வொரு முறையும் நிர்ணயிக்கப்பட்ட தொகையை காட்டிலும் 30 சதவீத தொகையை ஒப்பந்த நிறுவனங்கள் கூடுதலாக கேட்கிறது. மின் பணிகளை செய்யும் ஒப்பந்த நிறுவனங்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருக்கிறது. இதன் காரணமாக ஒப்பந்தம் இறுதி செய்வதில் தாமதம் ஏற்படுகிறது,’’ என மாநில நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.

Tags : pier ,
× RELATED கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில்...