×

புளியங்குடி தோட்டத்தில் மலைப்பாம்பு பிடிபட்டது

புளியங்குடி டிச.11: புளியங்குடி டி.என்.புதுக்குடி மேற்கு பகுதியில் எலுமிச்சை தோட்டத்தில் இருந்த மலைப்பாம்பை வனப்பகுதியில் விடப்பட்டது.
டிஎன் புதுக்குடிமேற்கு பகுதியில்   சாகுல் ஹமீது என்பவரின் எலுமிச்சை தோட்டம் உள்ளது நேற்று  காலை வழக்கம் போல சாகுல்ஹமீது தோட்டத்திற்கு சென்ற போது 12 அடி நீள மலைப்பாம்பு இருப்பதை கண்டு திடுக்கிட்டார். .சங்கரன்கோவில் வனச்சரக அலுவலர் ஸ்டாலினுக்கு தகவல் தெரிவித்தார். உடனே வனவர் அசோக்குமார் பொதிகை  இயற்கை தலைவர் சேக் உசேன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சஞ்சீவிக்கு தகவல் கொடுத்தனர்.   அவர் மலைப்பாம்பை உயிருடன் பிடித்து புளியங்குடி வன பகுதியில் கொண்டு விட்டனர். உடன் வனக்காப்பாளர் கோபி,முத்துராம் மற்றும் கந்தசாமி வேட்டை தடுப்பு காவலர்கள் பிள்ளையார்,திருமலை,ஜோதிமணி ஆகியோர் இருந்தனர்.

Tags : Puliyankudi ,garden ,
× RELATED திசையன்விளையில் சாலை பள்ளத்தில் பதிந்த லாரி