×

காஸ் நுகர்வோர் குறை தீர் கூட்டம்

நெல்லை, டிச. 30: நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் இன்று (30ம் தேதி) நடக்கிறது. இதுகுறித்து நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் துரை வெளியிட்ட செய்திக்குறிப்பு: நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கு எரிவாயு உருளை பதிவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகள், தடங்கல்கள் மற்றும் எரிவாயு உருளைகள் வழங்குவதில் காலதாமதம் குறித்து நுகர்வோர்கள் தங்கள் குறைகளை பதிவு செய்யலாம்.இதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர் மற்றும் எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொள்ளும் எரிவாயு நுகர்வோர் குறை தீர் கூட்டம் இன்று (30ம் தேதி) பிற்பகல் 4 மணியளவில் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு நுகர்வோர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Tags : Nellai ,Nellai Collectorate ,Nellai District ,Revenue Officer ,Durai ,
× RELATED நீச்சல் போட்டியில் சாதனை படைத்த மாணவருக்கு பாராட்டு