×

களக்காடு அருகே பைக் விபத்தில் காவலாளி படுகாயம்

களக்காடு, டிச.31: மூன்றடைப்பு அருகேயுள்ள வடக்கு இளையாமுத்தூரைச் சேர்ந்தவர் சுடலைக்கண்ணு மகன் சண்முகம் (45). இவர் தற்போது களக்காடு அருகே கடம்போடுவாழ்வில் வசித்து வருகிறார். நெல்லையில் உள்ள ஆன்லைன் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று சண்முகம் வேலைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். மீனவன்குளம், மணிமுத்தாறு கால்வாய் கரையில் சென்றபோது, எதிரே வந்த பைக், சண்முகம் ஓட்டி சென்ற பைக் மீது மோதியது. இதில் சண்முகம் படுகாயம் அடைந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர் வள்ளியூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய பைக்கை ஓட்டி வந்தவரை தேடி வருகின்றனர்.

Tags : Kalakkadu ,Shanmugam ,Sudalaikannu ,North Ilayamuthur ,Mundradaipu ,Kadambodu ,Nellai ,
× RELATED துவரங்குறிச்சி அருகே சாலையை சீரமைக்க கேட்டு மக்கள் மறியல்