தியாகதுருகத்தில் 2 அரசு பள்ளியில் புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை

கள்ளக்குறிச்சி:    தியாகதுருகத்தில் உள்ள 2 ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் புதிய   கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை நடந்தது.     

தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய ஆண்கள் தொடக்கப்பள்ளியில் கூடுதலாக 2  வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு ரூ.13 லட்சம் மதிப்பிலும், அதே பகுதியில் உள்ள பெரியமாம்பட்டு ஊராட்சி ஒன்றிய பெண்கள் தொடக்கப்பள்ளியில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கு ரூ.8.50 லட்சம் என மொத்தம் ரூ.21.50 லட்சம் மதிப்பிலான நிதி கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டது. இரண்டு பள்ளியிலும் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராமதாஸ் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் அய்யப்பா, ஷியாம்சுந்தர், வட்டார கல்வி அலுவலர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தியாகதுருகம் நகர பொறுப்பாளர் நம்பி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பிரபு எம்எல்ஏ கலந்துகொண்டு இரண்டு பள்ளியில் புதிய கட்டிட கட்ட பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் நாகம்மாள், உதவி பொறியாளர் கோமதி, பணி மேற்பார்வையாளர் பச்சமுத்து, பேரூராட்சி இளநிலை உதவியாளர்கள் செந்தில்குமார், கொளஞ்சியப்பன், துப்புரவு மேற்பார்வையாளர் ரமேஷ், கூட்டுறவு சங்க தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய அண்ணா தொழிற் சங்க செயலாளர் ரமேஷ், நகர அவைத்தலைவர் அய்யம்பெருமாள், நகர பொருளாளர் பாண்டு, நகர இளைஞரணி செயலாளர் ஜெயபிரகாஷ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலகிருஷ்ணன், முன்னாள் துணை தலைவர் சந்தோஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>