நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள்

நாகர்கோவில், டிச.5:  மாற்றுத்திறனாளி குழந்தை களுக்கு விளையாட்டு போட்டிகள் நாகர்கோவிலில் நடந்தது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தில் குமரி மாவட்டத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா அனைத்து ஒன்றியங்களிலும் கொண்டாடப்பட்டது. அகஸ்தீஸ்வரம் வட்டார வள மையத்திற்குட்பட்ட குழந்தைகளுக்கு நாகர்கோவில் எஸ்.எல்.பி பெண்கள் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பலதரப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், பலூன் உடைத்தல், நின்று நீளம் தாண்டுதல், பந்து எறிதல் போன்ற போட்டிகளில் கலந்து கொண்டனர். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ராமன், மரம் நட்டு போட்டிகளை தொடங்கி வைத்து பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

 மாவட்ட கல்வி அலுவலர் மோகனன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் மரிய பாக்கியசீலன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பிருந்தா, பள்ளி தலைமையாசிரியை ராஜி, வட்டார வளமைய  மேற்பார்வையாளர் அகஸ்டா நேவிஸ் மலர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராஜன், சுந்தரமணி, ஷீஜா, சுகிதா, ஆசிரியப் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், இயன்முறை மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
இறச்சகுளம்: இறச்சகுளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, உள்ளடங்கிய கல்வித்திட்டம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது. தோவாளை வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர் (பொறுப்பு) ஜெயகுமாரி தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார். ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு ஆசிரியர்கள், பிசியோதெரப்பிஸ்டுகள் மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர் கலந்து கொண்டனர்.

Tags : Sports competitions ,Nagercoil ,
× RELATED பெரம்பலூரில் 31ம் தேதி...