×

கிணற்றில் விழுந்து குழந்தை பலி

ஆவடி: அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் சிவலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்(36).   கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜெயந்தி(30). இவர்களுக்கு நித்தீஸ்வரன் என்ற ஒன்றரை வயதில் ஆண் குழந்தை இருந்தது. இதற்கிடையில் நித்தீஸ்வரன் அடிக்கடி வீட்டு பின்புறம் உள்ள காலி இடத்தில் விளையாடுவது வழக்கம். இந்நிலையில், நேற்று காலை குழந்தை வீட்டுக்கு பின்புறம் உள்ள தரை ஒட்டிய கிணற்றுக்கு அருகில்  கொண்டிருந்தான். அப்போது, எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தான். இதனை பார்த்த, சதீஷ்குமார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கிணற்றுக்குள் குதித்து குழந்தையை மீட்டு ரெட்டேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை பார்த்த, பெற்றோர் கதறி அழுதனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜிவ் பிரின்ஸ் அரோன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். …

The post கிணற்றில் விழுந்து குழந்தை பலி appeared first on Dinakaran.

Tags : Satish Kumar ,Sivalingapuram ,Ampathur ,Jayanthi ,Nitheeswaran ,
× RELATED கிணற்றில் தொழிலாளி மர்மச்சாவு