×

பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர அழைப்பு

உடுமலை,  நவ. 29: பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில், இயற்கை சீற்றங்களான  புயல், வெள்ளம், நோய் பாதிப்பு மற்றும் வறட்சி போன்ற இயற்கை இடர்பாடுகளில்  இருந்து பயிர்களுக்கு காப்பீடு பெறலாம். 2016ம் ஆண்டு முதல் புதிய பயிர்  காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், மக்காச்சோள  பயிருக்கு வருவாய் கிராம அளவிலும், பனிக்கடலை பயிருக்கு பிர்கா அளவிலும்  மகசூல் கணக்கீடு செய்து இழப்பீடு வழங்கப்படுகிறது. மேலும் குடிமங்கலம்  வட்டார விவசாயிகள் ஆதார் அட்டை நகல், நில உரிமைச் சான்று, வங்கி கணக்கு  புத்தகம் நகல், பயிர் அடங்கல் போன்ற ஆவணங்களுடன் இ-சேவை மையங்களில் பதிவு  செய்யலாம்.பனிக்கடலைக்கு காப்பீடு செய்ய வரும் 30ம் தேதி கடைசி  நாளாகும். மக்காச்சோள பயிருக்கு காப்பீடு செய்ய டிசம்பர் 20ம் தேதி கடைசி  நாளாகும். பனிக்கடலைக்கு பிரிமியம் ஏக்கருக்கு ரூ.236.25. காப்பீட்டு தொகை  ரூ.15,750 ஆகும். மக்காச்சோளத்துக்கு ஏக்கருக்கு ரூ.400.50 பிரிமியம் தொகை  ஆகும். காப்பீட்டு தொகை ரூ.26,700 ஆகும். இந்த வாய்ப்பை விவசாயிகள்  பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு பெதப்பம்பட்டி  வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை 94880 20371 என்ற எண்ணிலும்,  குடிமங்கலம், வ.வேலூர், சோமவாரப்பட்டி, பூளவாடி, கொங்கல்நகரம் பகுதி வேளாண்  அலுவலகங்களையும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags :
× RELATED அமராவதி பூங்காவில் தென்னை மரங்கள், சிற்றுண்டிச்சாலை பொது ஏலம்