புளியங்குடியில் முப்பெரும் விழா

புளியங்குடி,நவ.28: புளியங்குடி எபிஜே அப்துல்கலாம் அமைப்பின் சார்பில் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா, நல திட்ட உதவிகள் வழங்கும் விழா, சமுக சேவகர்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடந்தது. அமைப்பின் தலைவர் சின்னராஜ் தலைமை வகித்தார்.அரசு நூலகர் முத்துமாணிக்கம் வரவேற்றா. அமைப்பு செயலாளர் பாக்யராஜ்  விளக்கவுரை வழங்கினார். பொருளாளர் காந்தி முன்னுரை வழங்கினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக நெல்லை முன்னாள் கலெக்டர் தனவேல்,  புளியங்குடி நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சுரேஷ் மற்றும் புளியங்குடி காவல் உதவி ஆய்வாளர் தர்மராஜ் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இயற்கை விவசாயி அந்தோணி சாமி, கோமதிநாயகம், காஜாமொஹிதீன், சித்துராஜ், அலாவுதீன், குருபால்ராஜ், ஆவுடையப்பன் மற்றும் எராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர். பேராசிரியர் இருதயராஜ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

Related Stories:

>