×

தமிழகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைப்பு வீட்டுமனை பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனு கொடுக்கும் போராட்டம்

ஜெயங்கொண்டம், நவ.27: ஜெயங்கொண்டம் பகுதியில் பல தலைமுறையாக அனைத்து சமய நிறுவன இடங்களில் குடியிருப்போருக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே நடைபெற்றது. போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் தங்கராசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகாராஜன், தா.பழூர் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மணிவேல் கண்டன உரையாற்றினார்.

போராட்டத்தில் வீட்டுமனை இல்லாத வறுமைகோட்டிற்கு கீழ் வாழும் ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், அரசு வழங்கும் முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிக்கு அரசு முகாம் மூலம் ஆணை வழங்கப்பட்டிருக்கும் பட்டியலிலுள்ள பயனாளிகளுக்கு அனைத்து பகுதிகளிலும் பாரபட்சம் இன்றி வழங்கிட வேண்டும். இந்து சமய அறநிலைய துறையை முற்றிலும் சீரழித்து அதன்கீழ் உள்ள கோயில் மற்றும் சொத்துக்களை ஆதிக்க சக்திகளின் கையில் ஒப்படைக்க முயற்சிக்கும் மதவெறி அமைப்புகளை தனிமைப்படுத்தி அறநிலை துறையை பாதுகாக்க வேண்டும். ஜெயங்கொண்டம் நகராட்சி, மகிமைபுரம் மலைவாழ் மக்களுக்கு தலா குடும்பம் ஒன்றிற்கு 5 ஏக்கர் நிலமும், வீட்டுமனை பட்டாவும், வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.போராட்டத்தில் பூபாலன், குமார், பல்கீஷ், பழனிவேல், தர்மலிங்கம், முத்து, அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Communist Party of India (Marxist) ,house ,Tamil Nadu ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்