×

கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் உதயம்

கள்ளக்குறிச்சி,  நவ. 27:  தமிழகத்தின்  34வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தை  முதல்வர் எடப்பாடி  பழனிசாமி துவக்கி வைத்து  5 ஆயிரத்து 873 பேருக்கு  ரூ.23 கோடியிலான  நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கடலூரை தலைமையிடமாக   கொண்ட தென்னாற்காடு மாவட்டம் கடந்த 1993ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி   கடலூர், விழுப்புரம் என 2 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. விழுப்புரம்   மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி என  4  வருவாய் கோட்டங்கள், 13 வட்டங்கள், 3 நகராட்சிகள், 2 பாராளுமன்ற   தொகுதிகள், 11 சட்டமன்ற தொகுதிகள் என பரப்பளவிலும், மக்கள் தொகை   அடிப்படையிலும் பெரிய மாவட்டமாக இருந்தது.
விழுப்புரம்  மாவட்டத்தை  பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக ெகாண்டு புதிய மாவட்டம்  அறிவிக்க  வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என தமிழக   சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தொடர்ந்து தனி அலுவலர்   நியமிக்கப்பட்டு, மாவட்ட பிரிப்பு பணிகள் நடந்து வந்தது. கடந்த சில   நாட்களுக்கு முன்  கள்ளக்குறிச்சிக்கு மாவட்ட கலெக்டராக கிரண்குரலாவும்,   எஸ்பியாக ஜெயச்சந்திரனும் நியமிக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக   கள்ளக்குறிச்சி மாவட்ட துவக்க விழா நவம்பர் 26ம் தேதி நடைபெறும் என   தெரிவிக்கப்பட்டது. அதன்படி கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட  துவக்க விழா  நேற்று  கள்ளக்குறிச்சி சாமியார் மடம் மைதானத்தில் நடந்தது. துணை  முதல்வர் பன்னீர்செல்வம் தலைமை  தாங்கினார். வருவாய் துறை  அமைச்சர்  உதயகுமார், சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் ஆகியோர்  முன்னிலை  வகித்தனர். தலைமை செயலாளர் சண்முகம் வரவேற்றார்.  சிறப்பு  அழைப்பாளராக  முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு  கள்ளக்குறிச்சி  புதிய  மாவட்டத்தை துவக்கி வைத்ததோடு 5873 பயனாளிகளுக்கு 23 கோடியே 58  லட்சம்  மதிப்பில் நலத்திட்ட  உதவிகள் வழங்கினார். தொடர்ந்து வருவாய்த்துறை, நகராட்சி   நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பள்ளி கல்வித்துறை,   நெடுஞ்சாலைத்துறை, கால்நடைத்துறை ஆகிய துறைகளில் 466 பணிகளுக்கு 194 கோடியே 81   லட்சம் மதிப்பில் அடிக்கல் நாட்டினார். ரூ.24 கோடியே 77 லட்சம்  மதிப்பில்   கட்டி முடிக்கப்பட்ட 52 கட்டிடங்களை திறந்து வைத்தார்.

மாவட்ட  ஆட்சியர்கள்  கள்ளக்குறிச்சி  கிரண்குராலா, விழுப்புரம் அண்ணாதுரை, அரசு  கூடுதல் தலைமை  செயலாளர் அதுல்ய  மிஸ்ரா ஆகியோர் திட்ட விளக்கவுரையாற்றினர். அரசு  முதன்மை  செயலாளர் மற்றும்  வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன்,  அமைச்சர்கள்  வனத்துறை திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர்ராஜூ,  எஸ்.பி.வேலுமணி, அன்பழகன், எம்.சி.சம்பத், காமராஜ், ராதாகிருஷ்ணன்,  துரைக்கண்ணு,  வெல்லமண்டி நடராஜன்,  ராஜேந்திர பாலாஜி, எம்.ஆர்.விஜயபாஸ்கர்,  ராஜலட்சுமி,  பாஸ்கரன், வளர்மதி,  செங்கோட்டையன், தங்கமணி, ஜெயக்குமார்,  சரோஜா,  கருப்பண்ணன், ஓ.எஸ்.மணியன்,  சி.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ,  வீரமணி,  பெஞ்சமின், நிலோபர் கபில்,  பாண்டியராஜன், ராமச்சந்திரன், அரசு  கொறடா  ராஜேந்திரன், வளர்மதி மற்றும் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர்  ஜான்பாஷா,  மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி,   கைத்தறி நெசவாளர்  கூட்டுறவு சங்கங்களின் இணைய தலைவர் பரமசிவம், முன்னாள்  மாவட்ட ஜெ.பேரவை  தலைவர் ஞானவேல், மாவட்ட நிர்வாகி சீனுவாசன், ஒன்றிய துணை  செயலாளர் ராஜவேல்,  ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் குமரவேல், சிஎம்எஸ்  இயக்குநர்  செந்தில்குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சுபாஷ்சந்திரன்,  ஒன்றிய பாசறை  நிர்வாகி ராஜீவ்காந்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள்  குமார்,  மணிவண்ணன், செல்வராஜ், வரதன், தேவேந்திரன், அமுதா, முன்னாள்  மாவட்ட  கவுன்சிலர் மணி, மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன், கூட்டுறவு சங்க  தலைவர்  குமரவேல், ஒன்றிய அண்ணா தொழிற்சங்க செயலாளர் ரமேஷ், ஒன்றிய பாசறை  தலைவர்  பரியாஸ், தியாகதுருகம் நகர நிர்வாகி நம்பி, கிளை செயலாளர் அருண்,  ஒன்றிய  பாசறை நிர்வாகி சிவா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், பயனாளிகள்,   பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு முன்னதாக  கள்ளக்குறிச்சி-மாடூர் டோல்கேட் பகுதியில் விழுப்புரம் தெற்கு மாவட்ட  அதிமுக செயலாளரும், உளுந்தூர்பேட்டை எம்எல்ஏவுமான குமரகுரு தலைமையில்  முதல்வர் பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது  கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணைய தலைவர்  ராஜசேகர், தியாகதுருகம் ஒன்றிய செயலாளர் ஐயப்பா உள்ளிட்ட நிர்வாகிகள்  உடனிருந்தனர்.

Tags : Kallakurichi ,
× RELATED கள்ளக்குறிச்சி மதி மரண வழக்கில்...