சூதாடிய 7 பேர் அதிரடி கைது

செஞ்சி, நவ. 27:  தனித்தனி சம்பவத்தில் சூதாடிய 7 பேரை போலீசார் கைது செய்து, பைக், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விழுப்புரம் அடுத்த கெடார் போலீசாருக்கு வெங்கந்தூர் ஏரியில் சூதாடுவதாக தகவல் வந்ததன் பேரில் அங்கு சென்ற சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் பணம் வைத்து சூதாடிய அதனூர் கிராமத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மகன் பெருமாள் (26), விழுப்புரம் சாணிமேடு பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் அய்யப்பன் (39) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 6,500 ரூபாய் பைக், கால்குலேட்டர், பில் புக் மற்றும் 2 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். உளுந்தூர்பேட்டை: உளுந்தூர் பேட்டை காவல்நிலைய சப்- இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நைனாக்குப்பம் கிராமத்தில் உள்ள ஒரு இடத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட மணிகண்டன்(33), ரமேஷ்(30), ராமசாமி(43), சண்முகம்(39), மற்றொரு மணிகண்டன்(28) ஆகிய 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ. 2500 பணம் மற்றும் 40 புள்ளித்தாள்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>