×

அரவக்குறிச்சி அருகே மொபட் மீது கார் மோதி தொழிலாளி பரிதாப பலி

அரவக்குறிச்சி, நவ. 26: அரவக்குறிச்சி அருகே கார் மோதி மொபட்டில் சென்ற கூலி தொழிலாளி பலியானார். மோதி விட்டு நிற்காமல் சென்ற காரை போலீசார் தேடி வருகின்றனர். அரவக்குறிச்சி அருகே பெத்தாச்சி நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(50). கூலித் தொழிலாளி. இவர் பள்ளபட்டிக்கு வேலைக்கு சென்று விட்டு மொபட்டில் ஊர் திரும்பி கொண்டிருந்தார், கரூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இந்திரா நகர் பிரிவு கடந்து வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்தார். கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற காரை அருகிலுள்ள சுங்கச்சாவடி சிசிடிவி கேமரா மூலம் கண்டறிந்து அரவக்குறிச்சி போலீசார் தேடி வருகின்றனர்

வாகனம் மோதி வாலிபர் பலி:
கரூர் - சேலம் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகில் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் அடையாளம் தெரியாத வாகனத்தால் அடிப்பட்டு இறந்து கிடந்தார். தகவலறிந்து அங்கு சென்ற வேலாயுதம்பாளையம் போலீசார் உடலை கைப்பற்றி வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கரூர் ஊரக வளர்ச்சி துறையில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த மூலிமங்கலத்தை சேர்ந்த பிரபு (35) என்பது தொியவந்தது. இது குறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனா்.

கஞ்சா விற்றவர் கைது:
கரூர் வெங்கமேடு என்எஸ்கே நகர் பகுதியில் கஞ்சா விற்பதாக வெங்கமேடு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து என்எஸ்கே நகர் சுடுகாடு பகுதியில் போலீசார் நேற்றுமுன்தினம் சோதனை நடத்தினர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த கந்தன்(38) என்பவர் கஞ்சா விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

முகம் சிதைந்த நிலையில் பெண் சடலம்:
கரூர் அடுத்த வாங்கல் சுக்காமாபுரம் காவிரியாற்று பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் முகம் சிதைந்த நிலையில் கிடந்தது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் வாங்கல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அஙகு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணல் அள்ளிய மாட்டு வண்டிகள் பறிமுதல்:
கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்த முனியப்பனூர் காவிரியாற்று பகுதியில் இருந்து அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் எடுப்பதாக வாங்கல் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து நேற்றுமுன்தினம் இரவு அங்கு சென்று போலீசார் சோதனை நடத்திய போது, அங்கு 7 மாட்டு வண்டிகளில் திருட்டுத்தனமாக மணல் அள்ளுவது தெரிந்தது. போலீசாரை பார்த்ததும், மாட்டுவண்டிகளை அப்படியே விட்டுவிட்டு அனைவரும் ஓடி விட்டனர். போலீசார் 7 மாட்டுவண்டிகளையும் மணலுடன் பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் ெகாண்டு வந்தனர். தப்பி ஓடிய 7 பேரையும் தேடி வருகின்றனர்.

பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது:
சின்னதாராபுரம் அருகேயுள்ள நாவல் நகரை சேர்ந்தவர் சஹன்பாஷா மனைவி ஆயிஷாமரியம் (39) இவரது வீட்டுக்கு பக்கத்தில் வசிப்பவர் முகமதுஅலி(39) இவர் அடிக்கடி தனியாக இருந்த பெண்ணிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவதுடன் ஆபாசமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனை தட்டி கேட்ட பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஆயிஷா மரியம் சின்னதாராபுரம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் முகமதுஅலி மீது வழக்கு பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Car crashes ,Aravakurichi ,
× RELATED அரவக்குறிச்சி பகுதி ரேஷன் கடைகளில்...