×

சுல்தான்பேட்டையில் வட்டார கல்வி அலுவலகம் திறப்பு

சூலூர், நவ.26:  சுல்தான்பேட்டை வட்டார கல்வி அலுவலகம் பழுதடைந்த கட்டிடத்தில் இயங்கி வந்த்து. இதை உடனடியாக மாற்ற வட்டார கல்வி அலுவலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதைத் தொடர்ந்து, சுல்தான் பேட்டை விநாயகா நகரில் உள்ள ஒரு அரசு கட்டிடத்தில் வட்டார கல்வி அலுவலகம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சூலூர் எம்.எல்.ஏ கந்தசாமி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்ற ஆவின் தலைவர் எஸ்.ஆர்.ராஜகோபால் புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்தார். கோவை மாவட்ட கல்வி அலுவலர் அய்யண்ணன் மற்றும் எஸ்.எஸ் குளம் வட்டார   கல்விமாவட்ட  அலுவலர் கீதா சுல்தான் பேட்டை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஷீலா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : Opening ,Regional Education Office ,
× RELATED வைகாசி மாத பூஜை சபரிமலை கோயில் நடை திறப்பு: பக்தர்கள் குவிந்தனர்