பிள்ளையார் பட்டியில் பகல் முழுவதும் நடைதிறப்பு

திருப்புத்தூர், நவ.19:  திருப்புத்தூர் அருகேயுள்ள பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் ஐயப்பன் மற்றும் முருகன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வசதியாக பகல் முழுவதும் நடை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்புத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோயில் உள்ளது. கார்த்திகை மாதம் தொடங்கியுள்ளதை அடுத்து ஐயப்பன், முருகன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வசதியாக கற்பக விநாயகர் கோவிலில் நேற்று முன்தினம் முதல் காலை 6 மணியிலிருந்து இரவு 8 மணிவரை நடை திறந்திருக்கும்.

மேலும், மார்கழி மாதம் மற்றும் தைப்பூசத்தையொட்டி டிச.17 முதல் 2020 பிப்ரவரி 8 வரை அதிகாலை 4 மணியிலிருந்து இரவு 8 மணிவரை பகல் முழுவதும் நடை திறந்திருக்கும். கோவிலுக்கு வரும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தகவலை கோயில் டிரஸ்டிகள் காரைக்குடி டாக்டர்.எம்.மெய்யப்பச் செட்டியார், குருவிக்கொண்டான்பட்டி பழ.பழனியப்பச் செட்டியார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: