வேட்டவலம் அருகே ஜல்சக்தி அபியான் திட்டப் பணிகளை மத்திய அதிகாரி ஆய்வு

வேட்டவலம், நவ.14:  வேட்டவலம் அடுத்த செல்லங்குப்பம் ஊராட்சியில் ஜல்சக்தி அபியான் திட்டப் பணிகள் குறித்து, மத்திய அதிகாரி ரஜீப்குமார் சென் ஆய்வு செய்தார்.வேட்டவலம் அடுத்த செல்லங்குப்பம் ஊராட்சியில் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் ஏரியில் குடிமராமத்து பணிகள், மரக்கன்றுகளுக்கு சொட்டு நீர் பாசனம் செய்யும் பணி, சித்தேரி நீர்வரத்து கால்வாயில் சிமென்ட் தடுப்பணை அமைக்கும் பணி ஆகியவற்றை, மத்திய அரசின் ஆய்வு குழுவை சேர்ந்த முதன்மை அதிகாரி ரஜீப்குமார் சென் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.அப்போது அவர், நீர்வள ஆதாரங்களை மேம்படுத்துவது குறித்து அப்பகுதி விவசாயிகளிடம் ஆலோசனை நடத்தினார். மேலும், திட்டப் பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அப்போது, துணை ஆட்சியர்கள் (பயிற்சி) ஆனந்த், மந்தாகினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயசுதா, உதவி செயற்பொறியாளர்கள் ராஜா, சுந்தரபாண்டியன், கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மகாதேவன், வட்டார வளர்ச்சி அலுவலர் பழனி, பொறியாளர்கள் பிரசன்னா, வினோத், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுகுமார், ஊராட்சி செயலாளர் பச்சையப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories:

>