×

போலீசாரை கண்டித்து துண்டு பிரசுரம் ஒட்டிய 2 பேர் மீது வழக்கு

வந்தவாசி, நவ.14: வந்தவாசி அடுத்த கீழ்சாத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் வினோத்(23). இவரை கடந்த 3ம் தேதி  செம்பூர் கிராமத்தை சேர்ந்த ராஜேஷ்,  மனோகரன் ஆகியோர், சரமாரி தாக்கி ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் பொன்னூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில், புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட செம்பூர் கிராமத்தை சேர்ந்தவர்களை கைது செய்யாத போலீசாரை கண்டித்து நேற்று, கீழ்கொடுங்காலூர் கூட்ரோடு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் துண்டு பிரசுரம் ஒட்டபட்டு இருந்தது. இதுகுறித்து கீழ்கொடுங்காலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயன், 2 பேர் மீதும் வழக்குப்பதிந்து தேடிவருகிறார்.

Tags : policemen ,
× RELATED சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில்...