×

கொள்ளிடம் ஆற்றில் இருந்து அனுமதியின்றி மணல் எடுத்து வந்த 4 லாரிகள் பறிமுதல்

காட்டுமன்னார்கோவில், நவ. 8: காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள நாகை மாவட்ட கொள்ளிடம் ஆற்றில் மணல் திருட்டு நடைபெறுவதாக கடலூர் மணல் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கந்தகுமாரன் வீராண ஏரிக்கரை சாலையில் உதவி ஆய்வாளர்கள் முருகையன், ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 4 லாரிகளில் ஆற்றுமணல் இருப்பதை கணடு, ஓட்டுநர்களிடம் விசாரணை நடத்தி ஆவணங்களை சரிபார்த்தனர்.அதில், 4 லாரிகளில் உரிய ஆவணங்கள் இன்றி மணல் ஏற்றி வந்தது தெரிந்தது. இதையடுத்து 4 லாரிகளையும் பறிமுதல் செய்து நெடுஞ்சேரி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.  அங்கு காவல்நிலைய உதவி ஆய்வாளர் சக்திகணேஷ் விசாரணை செய்தார்.அதில், பண்ருட்டி நத்தம் பகுதியை சேர்ந்த யாசகம் மகன் சவுந்திரபாண்டியன் (29), குடியிருப்பு பகுதியை சேர்ந்த சிவசாம்பு மகன் சத்தியராஜ்(29), வடக்குத்து பகுதியை சேர்ந்த பாண்டியன் மகன் வசந்தராஜன்(31) மற்றும் வரதராஜன்பேட்டை கிருஷ்ணசாமி மகன் சந்தோஷ்குமார் என தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து, 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kolli River ,
× RELATED நிரந்தரமாக அடைக்கப்பட்டுள்ளதா?...