×

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய டிச.15 வரை அவகாசம்

நாகர்கோவில், நவ.7: பூதப்பாண்டி வேளாண்மை உதவி இயக்குநர் ஜோஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தோவாளை வட்டாரத்தில் கும்பப்பூ சாகுபடியை விவசாயிகள் ஆரம்பித்துள்ள நிலையில் தற்போது நிலவி வரும் அசாதாரண இயற்கை சீற்றங்களினால் நெற்பயிர் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. தற்போது பெய்த கனமழையில் தெரிசனங்ேகாப்பு, ஈசாந்திமங்கலம், நாவல்காடு, சிறமடம், அருமநல்லூர் ஆகிய கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது.  கும்பப்பூ பருவத்தில் சாகுபடியாகும் நெற்பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு a445 செலுத்தினால் பயிர் சேதம் மற்றும் மகசூல் இழப்பு நேரிடும்போது காப்பீடு தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். ஏற்கனவே கடந்த ஆண்டு எட்டு கிராமங்களில் பயிர் காப்பீடு பிரிமியம் தொகை செலுத்திய சுமார் 400 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். எனவே அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்திட தங்கள் நிலத்திற்கு அடங்கல் நகல், ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தக நகல் உடன் தங்கள் பகுதியில் உள்ள உதவி வேளாண் அலுவலர்கள் மூலமாகவோ அல்லது நேரடியாக தங்கள் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அல்லது பொது சேவை மையத்திற்கு சென்று காப்பீடு செய்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. விவசாயிகள் காப்பீடு செய்யும் பட்சத்தில் இழப்பீடு கிடைப்பதற்கு வசதியாக டிசம்பர் 15ம் தேதி வரை காப்பீடு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED மழைநீர் வடிகாலில் கழிவை விட்ட...