×

உளுந்தூர்பேட்டை அருகே ஒருதலை காதலால் வாலிபர் தற்கொலை

உளுந்தூர்பேட்டை,  நவ. 7: உளுந்தூர்பேட்டை அருகே நன்னாவரம் கிராமத்தை சேர்ந்த கதிர்வேல் மகன் பிரபு(20). ஜேசிபி ஓட்டும் கூலி தொழிலாளியாக  இருந்துள்ளார். இந்நிலையில் பிரபு அதே கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை  ஒருதலையாக காதலித்து
வந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று  அரளிவிதையை அரைத்து குடித்து பிரபு மயங்கி விழுந்து கிடந்தார். உடன்  அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலனின்றி  பிரபு உயிரிழந்தார். இது குறித்து திருநாவலூர் காவல்நிலையத்தில் கதிர்வேல்  கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் பாரதி வழக்கு பதிந்து விசாரணை  செய்து வருகிறார்.Tags : lovers ,Ulundurpet ,
× RELATED நகை பிரியர்களுக்கு கடும் அதிர்ச்சி..!...