×

கடலூர் மாவட்டத்தில் 22 சப்-இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம்

கடலூர், நவ. 7: விரைவில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புகள் வெளியாக உள்ளன. இந்நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தொடர்ந்து ஒரே காவல் நிலையத்தில் 3 ஆண்டுகளாக பணியாற்றுவோர், சொந்த பகுதியில் பணியாற்றுவோர், புகார்களுக்கு உள்ளானோர்களை இடமாற்றம் செய்யுமாறு அனைத்து எஸ்பிகளுக்கும் தமிழக காவல்துறை தலைவர் உத்தரவிட்டிருந்தார்.வரும் 15ம் தேதிக்குள் மாற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டுமெனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் பேரில் கடலூர் மாவட்ட அளவில் முதற்கட்டமாக 22 சப்-இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து எஸ்.பி அபிநவ் உத்தரவிட்டார்.பணியிட மாறுதல் பெற்றவர்கள் விவரம் வருமாறு (அடைப்புக்குறிக்குள் பழைய இடம்) கடலூர் முதுநகர் காவல்நிலையத்திற்கு ரவி (கிள்ளை), தமிழ்வாணன் (புவனகிரி), விருப்பலிங்கம் (குறிஞ்சிப்பாடி) ஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர். பண்ருட்டிக்கு சுதாகர் (கடலூர் புதுநகர்), கடலூர் முதுநகர் காவல்நிலையத்திலிருந்து கிருஷ்ணமூர்த்தி கிள்ளைக்கும், தர்மலிங்கம் பரங்கிப்பேட்டைக்கும், லூயிஸ்ராஜ் சிதம்பரம் நகரத்திற்கும், ரங்கநாதன் பண்ருட்டிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

குமராட்சிக்கு வேல்குமார் (திருப்பாதிரிப்புலியூர்), புதுச்சத்திரத்திற்கு ஜோதி (தூக்கணாம்பாக்கம்), சிதம்பரம் தாலுகாவிற்கு அன்பழகன் (தேவனாம்பட்டினம்), திட்டக்குடிக்கு வீரசேகரன் (ஆலடி), வடலூருக்கு அண்ணாமலை (நடுவீரப்பட்டு), தூக்கணாம்பாக்கத்திற்கு மாயக்கிருஷ்ணன் (பண்ருட்டி), காட்டுமன்னார்கோவிலுக்கு தனசேகரன் (கிள்ளை), ஒரத்தூருக்கு முருகேசன் (புதுச்சத்திரம்), ஆவினங்குடிக்கு திருச்செல்வம் (கம்மாபுரம்), வேப்பூருக்கு தமிழ்ச்செல்வி (மங்கலம்பேட்டை), மங்கலம்பேட்டைக்கு துரைக்கண்ணு (ராமநத்தம்), நெய்வேலி தெர்மலுக்கு ராமலிங்கம் (ராமநத்தம்), ராமநத்தத்திற்கு .விஸ்வநாதன் (நடுவீரப்பட்டு), புவனகிரிக்கு பிரசன்னா (கடலூர் மதுவிலக்கு) ஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர்.


Tags : Sub-Inspectors Action Relocation ,Cuddalore District ,
× RELATED கடலூர் மாவட்டம் ராமாபுரம் ஊராட்சியில் பெண் அடித்துக் கொலை!!