×

உத்தமபாளையம் அருகே பயன்பாடில்லாத மகளிர் கழிப்பறை

உத்தமபாளையம், நவ. 6: உத்தமபாளையம் அருகே நாகையகவுண்டன்பட்டி ஊராட்சியில் பயன்பாடில்லாமல் மூடிக்கிடக்கும் மகளிர் கழிப்பறையால் திறந்தவெளி கழிப்பிடங்கள் அதிகரித்து வருகிறது. உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது நாகையகவுண்டன்பட்டி கிராம ஊராட்சி. இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. 7 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். விவசாய கூலிதொழிலாளர்கள் அதிகம் வசிக்கின்றனர். இங்குள்ள நாகையகவுண்டன்பட்டி-ராயப்பன்பட்டி செல்லும் சாலையில் உள்ள பள்ளிக்கு அருகே மகளிர் சுகாதார கழிப்பறை உள்ளது. இது பயன்பாடு இல்லாமல் முள்களை போட்டு அடைத்து கிடக்கிறது.

இதனால் இந்த ஊரைச் சேர்ந்த மக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். குறிப்பாக பெண்கள் கழிப்பறை வசதி இல்லாமல் சிரமம் அடைகின்றனர். மகளிர் கழிப்பறை முள்போட்டு மூடப்பட்டுள்ளது தொடர்பாக புகார்கள் சென்றும், உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். இதனால் திறந்த வெளியில் பெண்கள் இயற்கை உபாதைகளை கழிக்கும் நிலை உள்ளது. எனவே இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுநல ஆர்வலர் சிவாஜி கூறுகையில், ‘மகளிர் அதிகளவில் பயன்படுத்தக்கூடிய கழிப்பறை கடந்த 1 மாதமாகவே முள்போட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றனர்.

Tags : women ,Uthamapalayam ,
× RELATED தாயுடன் தூங்கிய 6 மாத பெண் குழந்தை கடத்தல்: 24 மணி நேரத்தில் 2 பெண்கள் கைது