×

2ம் நிலை காவலர்களுக்கான எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்வு இன்று தொடக்கம்

வேலூர், நவ.6:வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 2ம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்வு இன்று தொடங்கி வரும் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2ம் நிலை காவலர்கள், ஆயுதப்படை, சிறப்பு காவல்படை, தீயணைப்புத்துறை ஆகிய பிரிவுகளில் 2ம் நிலை காவலர்களுக்கான 8,888 காலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த மாதம் நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் 3.22 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதில் 46 ஆயிரத்து 700 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

அதேபோல், வேலூர் மாவட்டத்தில் 23,585 பேர் தேர்வு எழுதியதில் 3,688 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் 9,164 பேர் தேர்வு எழுதியதில் 1,334 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 2 மாவட்டங்களிலும் மொத்தம் 5,022 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.இவர்களுக்கான உடற்தகுதி தேர்வு வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கி வரும் 12ம் தேதி வரை நடக்கிறது. இதில், ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கயிறு ஏறுதல், மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட தேர்வுகள் நடக்கிறது. ஒரு நாளைக்கு ஆண்கள், பெண்கள் தலா ஆயிரம் பேர் வீதம் அழைக்கப்பட்டுள்ளனர். முதற்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் 13ம் தேதி முதல் 2ம்கட்ட உடற்தகுதி திறன் தேர்வு நடக்கிறது.

முதற்கட்ட உடற்தகுதி தேர்வில் உயரம், மார்பளவு மற்றும் 1500 மீட்டர் ஓட்டம் நடைபெறுகிறது. 2ம் கட்ட தேர்வில் நீளம் தாண்டுதல் அல்லது உயரம் தாண்டுதல், கயிறு ஏறுதல் நடைபெறுகிறது. வேலூர் தேர்வு மைய கண்காணிப்பு அதிகாரியாக ஐஜி(பயிற்சி) சாரங்கன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags :
× RELATED சர்ச் பாதிரியார் அதிரடி கைது மதமாற்றம் செய்ய முயன்றதாக பெண் புகார்