×

குற்றங்களை தடுக்கும் வகையில் 25 இடங்களில் கண்காணிப்பு கேமரா

விழுப்புரம்,  நவ. 5: விழுப்புரத்தில் குற்றங்களை தடுக்கும் வகையில் 25 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை எஸ்பி ஜெயக்குமார் திறந்து வைத்தார். விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் பொதுமக்களின்  பங்களிப்புடன் தமிழ் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில், சுமார் ரூ.1.62  லட்சம் செலவில் முக்கிய சாலைகள், தெருக்களை கண்காணிக்கும் வகையில் 25  இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.இந்த கண்காணிப்பு  கேமராக்களின் சேவையை  எஸ்பி ஜெயக்குமார் பயன்பாட்டுக்கு  தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், விழுப்புரம் நகரில்  முதல்கட்டமாக பொதுமக்களே முன் வந்து கீழ் பெரும்பாக்கம் பகுதியில்  கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனர். இது, மற்ற பகுதி மக்களுக்கு  முன்னுதாரணமாக அமைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக மற்ற பகுதிகளிலும்  கண்காணிப்பு கேமராக்களை பொருத்த மக்கள் முன்வர வேண்டும்.ஏனெனில்,  இதுபோன்றுதான் திண்டிவனம் நகரில் ஒரு பகுதியில் தொடங்கி, நகரின்  பெரும்பாலான இடங்களை கண்காணிக்கும் வகையில் 500 கண்காணிப்பு கேமராக்கள்  பொருத்தப்பட்டன. கண்காணிப்பு கேமராக்களை அமைப்பதில் மக்கள்  விழிப்புணர்வுடன் இருப்பதுபோல, சாலை விபத்துகளை தவிர்ப்பதிலும் கவனம்  செலுத்த வேண்டும் என்றார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் எஸ்பி  சரவணக்குமார், நகராட்சி ஆணையர் லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். விழுப்புரம் நகர காவல் ஆய்வாளர் ராபின்சன், முன்னாள்  ராணுவ வீரர் கேசவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : locations ,
× RELATED சென்னையில் 5 இடங்களில் ED ரெய்டு