×

வேப்பேரி அரசு பள்ளியில் இருந்த ₹50 ஆயிரம் பொருட்கள் மாயம்

மரக்காணம், நவ. 5:    மரக்காணம் அருகே வேப்பேரியில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்தப்பள்ளியில் வேப்பேரி, சிறுவாடி, முருக்கேரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். இதனால் மாணவர்களின் நலனுக்கேற்ப ரூ. 19 லட்சம் மதிப்பில் கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு அதற்கான திறப்பு விழாவும் நடக்க உள்ளது. இதனால் இந்த புதிய கூடுதல் கட்டிடத்திற்கு அமைப்பதற்கான மார்பல்ஸ் கற்கள் மற்றும் சிமெண்ட் மூட்டைகளை கட்டிடம் கட்டும் ஒப்பந்ததாரர் எடுத்து வந்து கட்டிடம் அருகில் வைத்துள்ளார். இந்த பொருட்களில் சில பொருட்கள் மற்றும் கடந்த சில நாட்களுக்கு முன் மாயமாகி உள்ளது.  இதனைப்பார்த்த ஒப்பந்ததாரர் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளிடம் முறையிட்டுள்ளார். இதனால் பள்ளியின் நிர்வாகம் சார்பில் பள்ளி அருகில் வசிப்பவர்கள் மற்றும் பலரிடம் விசாரித்துள்ளனர். ஆனால் அவர்கள் பள்ளியில் மாயமான பொருட்கள் பற்றி எங்களுக்கு தெரியாது என்று கூறியுள்ளனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் பள்ளியில் மாயமான பொருட்களை இதே பள்ளியில் வேலை செய்யும் ஊழியர்கள்தான் எடுத்துச்சென்று இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரம்மதேசம் காவல் நிலையம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து பிரம்மதேசம் போலீசார் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மாயமான பொருட்களின் மதிப்பு ரூ. 50 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.  

Tags : Vepery Government School ,
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை